வேலை இழந்த பிறகு இயற்கை விவசாயத்தில் செழிக்கும் சகோதரர்கள் அனுபவம்
வேலை செய்துகொண்டிருப்பவர்கள் பலரும் விவசாயத்தை பகுதி நேரம் அல்லது கூடுதல் வருமானத்துக்காக மேற்கொள்கின்றனர். வேலை கைவிடும் நேரத்தில் ஆதாரமாக இருக்கிறதோ, வேளாண்மை தான். அரியலூர் மாவட்டத்தில் வசிக்கும் சகோதரர்கள் ரகுநாத் மற்றும் பிரேம்நாத் இதனை நேர்த்தியாக செய்கிறார்கள்.
கொரோனா ஊரடங்கு காலத்தில் சொந்த ஊருக்கு வந்த இவர்கள், மூன்றரை ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்துக்கொண்டு, கத்திரி, வெண்டை, பாகற்காய் ஆகியவற்றை சாகுபடி செய்து நல்ல லாபம் ஈட்டினர்.
ஒரு காலைப் பொழுதில், உடையார்பாளையம் வட்டம், தினக்குடியில் அவர்களின் காய்கறித் தோட்டத்திற்கு சென்றபோது, அறுவடை பணிகளை முடித்த ரகுநாத், பிரேம்நாத் இருவரும் வரவேற்று, விவசாய அனுபவத்தை பகிர்ந்தனர்.











