ஓடிடியில் வெளியாகி பேசுபொருளாகும் ‘காந்தி கண்ணாடி’ திரைப்படம்!
நடிகர் பாலா முக்கிய வேடத்தில் நடித்த ‘காந்தி கண்ணாடி’ திரைப்படம் தற்போது அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது.
வறுமையில் வாடும் மக்களுக்கு உதவி செய்து சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றவர் நடிகர் பாலா. இன்ஸ்டாகிராமில் இவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் ஆதரவு அளித்து வருகின்றனர்.
இவர் நடித்த ‘காந்தி கண்ணாடி’ திரைப்படத்தை இயக்குநர் ஷெரிப் இயக்கியிருந்தார். கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தது.
தற்போது ஓடிடியில் வெளியாகியுள்ள இப்படம், ரசிகர்களிடையே புதிய ஆர்வத்தை ஏற்படுத்தி சமூக வலைதளங்களில் மீண்டும் பேசுபொருளாகியுள்ளது.











