விஜய் தேவரகொண்டா–ராஷ்மிகா நிச்சயதார்த்தம் முடிந்தது? ரசிகர்கள் உற்சாகம்!
தெலுங்கு திரையுலகின் பிரபல நட்சத்திரங்கள் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்த கீதா கோவிந்தம் மற்றும் டியர் காம்ரேட் படங்களின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமான ஜோடியாக திகழ்ந்தனர்.
இருவருக்குமிடையிலான நெருக்கம் குறித்து நீண்ட நாட்களாகவே வதந்திகள் பரவி வந்த நிலையில், தற்போது ஐதராபாத்தில் விஜய் தேவரகொண்டா வீட்டில் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமூக வலைதளங்களில் வைரலாகும் புகைப்படங்களில், நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. மேலும், திருமணம் பிப்ரவரி மாதத்தில் நடைபெறும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதை குறித்து இருவரும் இதுவரை எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடவில்லை. ஆனால், ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்துகளால் இருவரின் பெயரை டிரெண்டாக்கி வருகின்றனர்.











