ஜப்பானில் வலுவான நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 6 பதிவு
ஜப்பான் பசிபிக் நெருப்பு வளையத்தின் பகுதியில் அமைந்துள்ள காரணத்தால், அங்கு அடிக்கடி நிலநடுக்கங்கள் நிகழ்கின்றன. சமீபத்தில், ஹோன்சு நகரின் கிழக்கு கடற்கரை பகுதியில் வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6 ஆக பதிவாகியதால் மக்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.











