சுதேசி உணர்வோடு தீபாவளி கொண்டாடுவோம் – அமித் ஷா அழைப்பு
உள்துறை அமைச்சர் அமித் ஷா பொதுமக்களுக்கு தீபாவளியை சுதேசி உணர்வோடு கொண்டாடுமாறு அறிவுறுத்தியுள்ளார்.
கோவாவில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய அவர், தீபாவளி விழாவில் எந்த வெளிநாட்டு பொருளையும் வீட்டில் கொண்டு வராதே என்று உறுதிப்படுத்த வேண்டும் என கூறினார்.
மேலும், தொழிலதிபர்கள் தங்கள் கடைகள் மற்றும் மால்களில் உள்நாட்டு பொருட்கள் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். 140 கோடி இந்தியர்கள் அதைப் பயன்படுத்தினால், இந்தியா சிறந்த தேசமாக மாறும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.











