சென்னையில் தங்கம், வெள்ளி விலை வரலாற்று உச்சம் – நகைக்கடைகளில் பரபரப்பு!
சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது.
நாட்களாக ஏற்ற-இறக்கத்துடன் இருந்த தங்கத்தின் விலை இன்று திடீரென உயர்ந்து, ஒரு சவரன் ரூ.880 அதிகரித்து ரூ.88,480 ஆக விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல, ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.110 உயர்ந்து ரூ.11,060 ஆக உள்ளது.
வெள்ளியின் விலையும் உயர்வை எட்டியுள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.1 உயர்ந்து ரூ.166 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,66,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த விலை உயர்வால் நகை வியாபாரிகள் பரபரப்பாகியும், வாடிக்கையாளர்கள் காத்திருப்பு நிலைக்கு மாறியுள்ளனர். நிபுணர்கள் தெரிவிப்பதாவது – சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை உயர்வும், ரூபாயின் மதிப்பு குறைவதும் இதற்குக் காரணமாகும் என கூறப்படுகிறது.











