மேற்குவங்கம் மாநிலம், கொல்கத்தாவில் பல நாட்களாகக் கொட்டித் தீர்த்த கனமழை பல பகுதிகளை வெள்ளக்காடாக மாற்றியுள்ளது. இதன் தொடர்ச்சியாக பாலி கஞ்ச் பகுதியில் சென்ற ஒரு ரோல்ஸ் ராய்ஸ் கார், சாலையில் தேங்கிய மழைநீரில் பழுதாகி நடுவழியில் நின்றது.
சுமார் 10 கோடி மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் சீரிஸ் II காரின் இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்போது, 10 லட்சம் மதிப்புள்ள இந்திய தயாரிப்பான டாடா காரும் அதனை கடந்து சென்றதாக பதிவானது.
சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட வீடியோவில், “10 கோடி மதிப்புள்ள சொகுசு கார் மழைநீரில் பழுதாகி நிற்கும் போது 10 லட்சம் மதிப்புள்ள டாடா கார் அதனை கடந்து செல்கிறது” எனக் குறிப்பிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் வாகன ஆசைமிகு வாகன ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை கிளப்பியுள்ளது.