மதுரை மாவட்டம், திருநகர் 2-வது பேருந்து நிறுத்தம் பகுதியில் அமைந்துள்ள தாய்மடி இல்லம் முதியோர் காப்பகத்தில், இன்று (26.01.2026) குடியரசு தினத்தை முன்னிட்டு பாரதிய இந்து எழுச்சி இயக்கம் சார்பில் காலை 9 மணியளவில் தேசியக் கொடியேற்ற விழா நடைபெற்றது.
காப்பகத்தில் வசித்து வரும் முதியோர்களை உற்சாகப்படுத்தும் வகையில், அவர்களுக்கு தேசியக் கொடிகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து முதியோர்களின் முன்னிலையில், இயக்கத்தின் மாநில பொதுச் செயலாளர் காவி சேவகர் மணி அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
இந்நிகழ்வில் இயக்கத்தின் நிறுவனர் வழக்கறிஞர் மேகராஜ பாண்டியன், மாநில பொறுப்பாளர் மதுரை குணா, இளைஞரணி தலைவர் நிலையூர் வினோத், அருண், செல்லூர் வெங்கடேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கொடியேற்ற நிகழ்ச்சி நிறைவடைந்ததும், காப்பகத்தில் உள்ள முதியோர்களுக்கு இனிப்புகள் மற்றும் மிச்சர் வழங்கப்பட்டு குடியரசு தினம் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்பட்டது.











