தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்துகள் நடைபெறும் தாசீம் தனியார் மகளிர் கல்லூரி திருப்புச் சாலையில் வேகத்தடை அமைக்க வலியுறுத்தி,
சமூக செயற்பாட்டாளர் கூட்டமைப்பு சார்பில் எதிர்வரும் 28.01.2026 புதன் கிழமை காலை 10.30 மணிக்கு கீழக்கரை பகுதியில் அல்வா (ஹல்வா) வழங்கும் ஜனநாயக போராட்டம் நடைபெற உள்ளதாக அறிவித்துள்ளனர்
நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கப்படாததை கண்டித்து, பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் இந்த போராட்டம் நடத்தப்படுவதாக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
சிறப்பு நிருபர் – கீழை பிரபாகரன்.
தொடர்பு எண் – +91 97892 29862











