கள்ளக்குறிச்சி மாவட்டம் வடபொன்பரப்பி காவல் எல்லைக்குட்பட்ட முஸ்குந்தா ஆற்றுப் பாலம் அருகே, 12.12.2025 அதிகாலை 02.00 மணியளவில் ஒரு அரசு பேருந்து விபத்துக்குள்ளானது.
கள்ளக்குறிச்சியிலிருந்து திருவண்ணாமலை நோக்கி சென்றிருந்த பேருந்து, கட்டுப்பாட்டை இழந்து அருகிலிருந்த பள்ளத்தில் சறுக்கி விழுந்ததாகக் கூறப்படுகிறது.
பேருந்தில் பயணித்த 16 பேரில் மூன்று பயணிகளும், பேருந்தின் ஓட்டுநர் பாலமுருகன் (46) அவர்களும் லேசான காயங்கள் அடைந்துள்ளனர்.
சம்பவத் தகவலைத் தொடர்ந்து, வடபொன்பரப்பி காவல் நிலைய உதவி ஆய்வாளர் சலாம் உசேன் அவர்கள் சம்பவ இடத்துக்கு சென்று, காயமடைந்தவர்களை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
விபத்து குறித்து காவல் துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.
தலைமை நிருபர்: பழனிவேல்-9677602585











