கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் கல்வராயன் மலை ஒன்றியம் புதுப்பாலப்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளியில் முப்பெரும் விழா சிறப்பாக நடைபெற்றது.
பாரதியார் பிறந்தநாள் விழா, கலைத் திருவிழா, மற்றும் பாராட்டு–பரிசளிப்பு விழா ஆகிய மூன்றும் ஒரே மேடையில் நடைபெற்றன.
மாநில அளவிலான டிரம்ஸ் வாசித்தல் போட்டியில் இரண்டாம் இடம் பெற்ற மாணவன் ப. பாலாபிக்காஷோ அவர்களுக்கு சிறப்பு பாராட்டு விழா நடத்தப்பட்டது.
மேலும், பத்தாம் வகுப்பில் சிறந்த மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு பாராட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் திரு. ப. வெங்கடேசன் அவர்கள் தலைமை தாங்கினார். தலைமை பட்டதாரி ஆசிரியர் மா. வெங்கடேசன் அவர்கள் வரவேற்புரை வழங்கினார்.
கார்குழலி நினைவு அறக்கட்டளை சார்பில் தலைவர் இராசு. தாமோதரன், பொருளாளர் தா. வசந்தா,
தமிழ் படைப்பாளர் சங்க செயலாளர் கோ. சக்திவேல்,
அரசம்பட்டு திருவள்ளுவர் தமிழ் சங்க தலைவர் வே. சௌந்தரராஜன்,
செய்தியாளர் திரு. தாமோதரன்,
பத்திரிக்கையாளர் சங்கம் சார்பாக வல்லூறு பத்திரிக்கை செய்தியாளர் திரு. சரவணன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவரை பொன்னாடை போர்த்தி பாராட்டினர்.
அத்துடன், 1000, 700, 300 திருக்குறளைத் தெரிந்த மாணவர்களுக்கும் பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
விழாவின் சிறப்பு விருந்தினராக கல்லை முத்தமிழ் சங்க நிர்வாகி, நடிகர், இயக்குனர், கவிஞர் திரு. முருகு குமார் கலந்து கொண்டு, மாணவன் ப. பாலாபிக்காஷோ அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி பரிசும் பாராட்டுகளும் வழங்கி வாழ்த்துரை நிகழ்த்தினார்.
நன்றி உரையை உதவி தலைமை ஆசிரியர் திரு. முருகையன் வழங்கினார்.
தலைமை நிருபர்: பழனிவேல்-9677602585











