சென்னை: நடிகர் துல்கர் சல்மான் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள நடிகர் துல்கர் சல்மான் வீட்டிலும், அவருக்குச் சொந்தமான நிறுவனங்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். காலை முதலே நடந்த இந்த சோதனையில், 2 வாகனங்களில் வந்த 6 பேர் கொண்ட அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
சமீபத்தில் துல்கர் சல்மான் தயாரித்த ‘லோகா’ திரைப்படம் உலகம் முழுவதும் 300 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலை எட்டிய நிலையில், வருமான மற்றும் நிதி பரிமாற்ற ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
கடந்த சில வாரங்களில், வெளிநாட்டிலிருந்து சொகுசு கார் இறக்குமதி செய்வதில் சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்ததாக புகார் வந்தது. இதனடிப்படையிலேயே கேரளாவில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.











