சென்னை: வழக்கறிஞரை விசிகவினர் தாக்கிய சம்பவம்
சென்னை பாரிமுனை பகுதியில், இருசக்கர வாகனத்தில் பயணித்த வழக்கறிஞர் மீது விசிகவினர் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் சென்னை உயர்நீதிமன்ற நுழைவு வாயில் அருகே நடைபெற்ற விசிக ஆர்ப்பாட்டத்தின் போது நிகழ்ந்தது. அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் இதில் கலந்து கொண்டார்.
ஆர்ப்பாட்டம் முடிந்ததும், திருமாவளவன் தனது காரில் புறப்பட்டபோது சாலையில் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதி இருந்தது. இதன் பின்னர், இருசக்கர வாகனத்தில் இருந்த வழக்கறிஞர், கார் ஓட்டுநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் விசிகவினர் வழக்கறிஞர் மீது ஆத்திரமாக தாக்குதல் நடத்தினர்.
போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.











