தொழிற்சாலைகளுக்குள் பசுமை – திருப்பூர் மாநகரில் இயற்கை விவசாயம்
திருப்பூர் என்றால் அனைவருக்கும் முதலில் தொழில் நகரம் நினைவுக்கு வரும். ஆனால் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு, திருப்பூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள் செழிப்பான விவசாய பூமியாக இருந்தது. பின்னலாடை நிறுவனங்கள் வருவதன் மூலம், இத்தனைய விளைநிலைகள் தொழிற்சாலைகளாக மாறத் தொடங்கின. பல்லடம், அவினாசி, காங்கேயத்திலும் தொழிற்சாலைகள் அதிகரித்து, தற்போது பெரும்பாலும் முழுமையாக நிரம்பிய நிலையில் உள்ளன.
இந்த சூழலில், திருப்பூர் மாநகர எல்லைக்கு உட்பட்ட நொச்சிப்பாளையம் பகுதியில், 4 ஏக்கர் நிலத்தில் இயற்கை விவசாயம் செய்து வரும் திருமுத்துசெல்வன் கவனத்தை ஈர்க்கிறார். இவர் தன் பண்ணையில் பாரம்பர்ய நெல் மற்றும் பலவிதமான காய்கறிகளை சாகுபடி செய்து, நகரத்தின் நடுவில் பசுமை நிலத்தை பேணுகிறார்.











