ஜிஎஸ்டி சீா்திருத்த பலனை விற்பனையாளர்கள் வழங்காததால் 3,000 புகார்கள்!
ஜிஎஸ்டி சீர்திருத்தம் அமலுக்கு வந்த பிறகு, அதன் பலன்கள் நுகர்வோருக்கு கிடைக்கவில்லை என்பதற்கான புகார்கள் தொடர்ச்சியாக பதிவாகி வருகின்றன. மத்திய நுகர்வோர் விவகாரத்துறைச் செயலர் நிதி கரே இதை உறுதிப்படுத்தியுள்ளார்.
செயலர் தெரிவித்ததாவது, தேசிய நுகர்வோர் உதவி எண் மூலமாக இதுவரை 3,000 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த புகார்கள் அனைத்தும் அடுத்த கட்ட நடவடிக்கைக்காக மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி சீர்திருத்தத்தின் பலன்கள் நுகர்வோருக்கு பெறப்படாமல் இருப்பது, வர்த்தக விலைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புக்கு நேரடி சிக்கலை ஏற்படுத்தி வருகிறது.











