அரை டிரில்லியன் செல்வத்தை நெருங்கிய முதல் நபர் – எலான் மஸ்க் சாதனை!
உலகப் பணக்காரர்களில் முன்னணியில் இருக்கும் எலான் மஸ்க், தற்போது அரை டிரில்லியன் டாலர் சொத்து மதிப்பை நெருங்கிய முதல் நபராக வரலாற்றில் இடம் பிடித்துள்ளார்.
போர்ப்ஸ் நாளிதழ் வெளியிட்ட உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில், ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா மற்றும் எக்ஸ் நிறுவனங்கள் மூலம், மஸ்க் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். அவரது சொத்து மதிப்பு சுமார் 500 பில்லியன் டாலர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மஸ்கின் சொத்து மதிப்பு உயர்வுக்கு காரணமாக, டெஸ்லா பங்குகளின் விலை அதிகரிப்பு, ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் எக்ஸ் ஏஐ நிறுவனங்களின் மதிப்பு உயர்வு ஆகியவை உள்ளன. கடந்த புதன்கிழமை மட்டும், டெஸ்லாவின் பங்குகள் 4% உயர்ந்ததால், மஸ்க் 7 பில்லியன் அமெரிக்க டாலர் சம்பாதித்தார்.
இந்த சம்பவம், உலகம் இதுவரை காணாத பணக்காரர் இடத்தை எலான் மஸ்க் பிடிக்க காரணமாக உள்ளது. குறிப்பு: ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் இந்திய மதிப்பில் சுமார் 8,800 கோடி ரூபாய்.











