ஐபோனில் சிரி மூலம் குரல் தரவு திருடல் குற்றச்சாட்டு – ஆப்பிள் நிறுவனத்திற்கு விசாரணை!
பிரபலமான ஆப்பிள் ஐபோன் பயனர்களுக்கான முக்கிய அம்சமாக விளங்கும் சிரி தொடர்பாக, பயனர்களின் குரல் பதிவுகளை அனுமதியின்றி சேகரித்து விற்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக, பிரான்சில் உள்ள மனித உரிமைகள் அமைப்பு LDH புகார் அளித்ததன் பேரில் அந்நாட்டு அதிகாரிகள் ஆப்பிள் நிறுவனத்தை விசாரித்து வருகின்றனர்.
ஆப்பிள் நிறுவனம் இதுகுறித்து விளக்கம் அளித்து, 2019 மற்றும் இந்த ஆண்டில் சிரியின் தனியுரிமைக் கட்டுப்பாடுகளை கடுமையாக்கியதாகவும், சிரி மூலம் சேகரிக்கப்பட்ட உரையாடல்களை ஒருபோதும் விளம்பரதாரர்களுக்கு விற்பதில்லை என்றும் தெரிவித்துள்ளது.
இதன் மூலம், பயனர்களின் தரவு பாதுகாப்பு குறித்து மீண்டும் கவனம் செலுத்தப்பட்டதாக மதிப்பிடப்படுகிறது.











