பத்ரிநாத் கோயிலில் ரஜினிகாந்த் ஆன்மிக தரிசனம் – வீடியோ வைரல்!
உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள பத்ரிநாத் கோயிலில், நடிகர் ரஜினிகாந்த் ஆன்மிக தரிசனம் மேற்கொண்டார்.
சமீபத்தில் வெளியான ‘கூலி’ திரைப்படத்தையடுத்து, இமயமலைக்கு மேற்கொண்ட அவரது ஆன்மிக பயண புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி உள்ளன.
இந்த பயணத்தின் போது, ரஜினிகாந்த் கோயிலில் பத்ரி விஷால் சுவாமியை வணங்கி வழிபட்டார். சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் பரவி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.











