மும்பையில் புதிய இல்லம் வாங்கிய சமந்தா – ‘புதிய தொடக்கம்’ என்கிற பதிவால் ரசிகர்கள் உற்சாகம்!
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா, தற்போது மும்பையில் புதிய வீடு வாங்கியுள்ளார் என்ற தகவல் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழில் கடைசியாக ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ திரைப்படத்தில் நடித்திருந்த சமந்தா, அதன் பின்னர் திரைபட வாய்ப்புகளில் சற்று இடைவெளி எடுத்திருந்தார். தற்போது உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தி வருகிறார். அதே நேரத்தில் பல விளம்பர ஒப்பந்தங்கள் குவிந்துள்ளதால், சமந்தா அடிக்கடி மும்பையில் தங்கி வருவதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீட்டின் வாசல் புகைப்படத்தை பகிர்ந்த அவர், “New Beginnings” எனக் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து, அவர் மும்பையில் புதிய வீடு வாங்கியிருக்கலாம் என ரசிகர்கள் ஊகித்து வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
சமந்தாவின் இந்தப் பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.











