கனடாவில் தெற்காசிய படங்களுக்கு எதிராக நடவடிக்கை! தீவைத்து தாக்கிய மர்ம நபர்கள்
கனடாவில் தெற்காசிய திரைப்படங்களுக்கு எதிராக அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று வெளிவந்துள்ளது.
ஒன்டாரியோ மாகாணத்தின் ஓக்வில் நகரில் அமைந்துள்ள ஒரு திரையரங்கில் இந்திய திரைப்படம் திரையிடப்பட்டு வந்தது. இந்நிலையில், அடையாளம் தெரியாத சில நபர்கள் அங்கு துப்பாக்கிச்சூடு நடத்தி, பின்னர் தீவைத்து சேதப்படுத்தினர்.
அந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. வன்முறை சம்பவத்தை அடுத்து, அப்பகுதியில் தெற்காசிய திரைப்படங்களின் திரையிடல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக திரையரங்கு நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்த முடிவு கனடாவில் உள்ள இந்திய சினிமா ரசிகர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.











