மத்திய பாடத்திட்டத்தில் ‘ஆபரேஷன் சிந்தூர் ’ சேர்ப்பு: மாணவர்களுக்கு நாட்டுப்பற்றை வளர்க்கும் பாடங்கள்
மாணவர்கள் நாட்டுப்பற்றும் தேசியத்தன்மையும் உணர்வதற்காக, மத்திய அரசு புதிய பாடத்திட்டத்தில் ‘ஆபரேஷன் சிந்தூர் ’ குறித்த பாடங்களை சேர்த்துள்ளது. புதிய கல்விக் கொள்கையின் படி, நடப்பு நிகழ்வுகளை பாடத்திட்டத்தில் இடைவேளை சேர்க்க நாடாளுமன்ற ஒப்புதல் பெற்ற தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) இந்த பாடத்திட்டத்தை வடிவமைத்துள்ளது.
இதன் கீழ், 3ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அடிப்படை பாடங்கள், 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மேம்பட்ட பாடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. பாடங்களில், பாகிஸ்தானின் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்திய ராணுவம் எடுத்த நடவடிக்கைகள் அடிப்படையில், முதல்நிலை மாணவர்களுக்கு ‘வீரப் பயணத்தின் துவக்கம்’, மேல்நிலை மாணவர்களுக்கு ‘துணிச்சலும் மரியாதையும்’ என்ற தலைப்புகளில் 8–10 பக்கங்கள் அளவில் பாடங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
பாடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ஆபரேஷன் சிந்தூர் வெறும் குறியீட்டு பெயர் அல்ல; கணவனை இழந்த ஹிந்து பெண்களுக்கு அன்பையும் உறுதுணையையும் வெளிப்படுத்தும் மக்கள் உணர்வைக் காட்டும் நிகழ்வாகும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.











