சென்னை கீழ்ப்பாக்கத்தில் அதிரடி சோதனை: பிரபல ஹோட்டலில் கஞ்சா விருந்தில் 3 பெண்கள் உட்பட 18 பேர் கைது!
சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் உள்ள பிரபல ஹோட்டலில் கஞ்சா புகைத்ததாக 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு (NIB) போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து, அந்த ஹோட்டலில் திடீர் சோதனை நடத்தப்பட்டது. அப்போது பல இளைஞர்கள் மற்றும் 3 பெண்கள் சேர்ந்து கஞ்சா புகைத்து கொண்டிருந்தது போலீசாருக்கு தெரியவந்தது.
பின்னர், 3 பெண்கள் உட்பட 18 பேரையும் கைது செய்த போலீசார், சம்பவ இடத்தில் இருந்த கஞ்சா மற்றும் புகைப்பொருட்களை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து போதைப்பொருள் விற்பனை தொடர்பான தகவல்களும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.











