திருவெற்றியூரில் பரபரப்பு: தேசப்பன் வீட்டில் மர்ம நபர்களின் பெட்ரோல் குண்டு வீச்சு!
சென்னை திருவெற்றியூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.
தொட்டிக்குப்பம் பகுதியில் வசித்து வரும் தேசப்பன் (வயது 59) என்பவரின் இல்லத்தின் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டை வீசியுள்ளனர். இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் திடீரென வீடு மீது குண்டை எறிந்து, வேகமாக தப்பிச் சென்றுள்ளனர்.
வீட்டு முன்பகுதியில் சிறிய அளவில் தீ ஏற்பட்ட நிலையில், உடனடியாக அப்பகுதி மக்கள் அதை அணைத்தனர். சம்பவம் குறித்து திருவெற்றியூர் போலீசார் விசாரணை ஆரம்பித்துள்ளனர். குற்றவாளிகளை அடையாளம் காண அருகிலுள்ள சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்படுகின்றன.











