மூணாறு அருகே தமிழ்நாடு சுற்றுலா பயணிகளை போதைச் செயல்பாட்டில் ஈடுபட்ட குழுவினர் தாக்கிய சம்பவம், சமூக வலைதளங்களில் வெளியான வீடியோவால் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவின் பிரபலமான சுற்றுலா தளமான மூணாறுக்கு தினமும் ஏராளமான பயணிகள் வருகை தரும் நிலையில், திருச்சியைச் சேர்ந்த அரவிந்த் தனது நண்பர்களுடன் சுற்றுலா சென்றிருந்தார்.
மூணாறு மலைப் பகுதியில் காரில் சென்றபோது, பின்னால் வந்த மற்றொரு காருக்கு வழிவிடவில்லை என்ற காரணத்தால் அப்பகுதி இளைஞர்கள் கவூசிக், அருண், சுரேஷ் ஆகியோர் பயணிகள் காரை தடுத்து நிறுத்தி தகராறில் ஈடுபட்டனர்.
மதுபோதையில் இருந்த மூன்று இளைஞர்களும் காரின் கண்ணாடியை உடைத்து, பயணிகளை தாக்கி தப்ப முயன்றனர். சம்பவத்தின்போது தோட்டத்தொழிலாளர்களையும் இவர்கள் மிரட்டினர்.
சமூக வலைதளங்களில் வீடியோ வைரலாகியதும், போலீசார் நடவடிக்கை எடுத்து மூன்று இளைஞர்களையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.











