“இளைஞர்களில் தேசப்பற்றையும் கலாச்சார பெருமிதத்தையும் விதைத்தவர் சுப்ரமணிய சிவா” – பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் வெளியிட்ட எக்ஸ் பதிவில், இளைஞர்களில் தேசப்பற்று உணர்வும் கலாச்சார பெருமிதமும் விதிக்கப்பட்டவர்கள் திருப்பூர் குமரன் மற்றும் சுப்ரமணிய சிவா என்று நினைவு கூறியுள்ளார்.
மோடி கூறியதாவது –
“இன்று நாம் பாரத மாதாவின் இரு தவப் புதல்வர்களான திருப்பூர் குமரன் மற்றும் சுப்ரமணிய சிவா ஆகியோரின் வாழ்க்கை மற்றும் சாதனைகளை நினைத்து வணங்குவோம். இந்த இருவரும் இந்திய விடுதலைக்காக தங்கள் வாழ்வையும் அர்ப்பணித்தவர்கள்.
திருப்பூர் குமரன், தனது இறுதி மூச்சுவரை நமது தேசியக் கொடியை ஏந்தி உயிர் தியாகம் செய்தார். இதன் மூலம் அவரது அசாத்திய துணிச்சலும் தன்னலமற்ற தியாகமும் வெளிப்பட்டது.
சுப்ரமணிய சிவா, தைரியமான எழுத்து மற்றும் ஊக்கமளிக்கும் உரை வழியாக எண்ணற்ற இளைஞர்களிடையே கலாச்சார பெருமிதத்தையும், தேசப்பற்றையும் விதித்தார்,” என அவர் கூறினார்.
பிரதமர் மோடி மேலும் வலியுறுத்தியதாவது,
“இவ்விரு மாமனிதர்களின் முயற்சிகள் நம் நினைவிலும் என்றும் நீக்கமற நிறைந்திருக்கும். அவர்கள் காலனித்துவ ஆட்சியிலிருந்து நமது விடுதலையை உறுதி செய்ய உதவிய மக்களின் போராட்டங்களையும் நினைவூட்டுகின்றது.
நமது தேச ஒற்றுமை மற்றும் வளர்ச்சியை நோக்கி நாம் அனைவரும் முன்னேறி, இவர்களது பங்களிப்புகள் எங்களுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கட்டும்,”
என்று பிரதமர் மோடி உற்சாகமாக தெரிவித்துள்ளார்.











