அரக்கோணத்தில் பரபரப்பு: விரைவு ரயிலில் புகை எழுந்ததால் பயணிகள் பீதி!
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே, சென்னை நோக்கி பயணித்த விரைவு ரயிலில் திடீரென புகை எழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவனந்தபுரத்திலிருந்து சென்னை நோக்கி வந்த விரைவு ரயில், மேல்பாக்கம் ரயில் நிலையம் அருகே சென்றுகொண்டிருந்தபோது, சில பெட்டிகளின் அடியிலிருந்து திடீரென புகை எழுந்ததை பயணிகள் கவனித்தனர். இதனால் பலர் பீதி அடைந்து சத்தமிட்டு ஓடினர்.
உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டு, சம்பவம் குறித்து ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைவாக அங்கு சென்ற ரயில்வே தொழில்நுட்ப குழுவினர், மின்மோட்டாரில் ஏற்பட்ட சிறிய தீ விபத்தை கட்டுப்படுத்தினர்.
பின்னர் பரிசோதனைக்குப் பின் ரயில் மீண்டும் இயக்கப்பட்டது. இதனால் ரயில் சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக பயணத்தைத் தொடர்ந்தது.
அதிர்ஷ்டவசமாக, இந்தச் சம்பவத்தில் எவருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை.











