விருதுநகர் அருகே காரியாபட்டியை சேர்ந்த ரமா என்பவர் அமேசானில் 400 ரூபாய் மதிப்பிலான water flask-ஐ ஆர்டர் செய்தார். ஆர்டரைப் பெறும் போது வந்த பார்சலை திறந்த போது அதில் flask பதிலாக கல் இருப்பது தெரியவந்தது, இது ரமாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பார்சலை கொண்டு வந்த நபரிடம் கேட்ட போது, அவர் இதுதொடர்பாக அமேசான் நிறுவனத்துடன் தொடர்பு கொள்ளுமாறு கூறி சென்றுவிட்டார். ரமா தற்போது நிறுவனத்தின் விளக்கத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார். இந்த சம்பவம் ஆன்லைன் ஆர்டர்கள் பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மைக்கு கேள்வி எழுப்பியுள்ளது.