செங்கம் அருகே நடந்த சாலை விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்ததைத் தொடர்ந்து, லாரி ஓட்டுநரை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலையின் குறுக்கே கயிறு கட்டியதால், இருபுறமும் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. மேலும், காவல்துறையினர் நேரில் வராததால் ஆத்திரமடைந்த உறவினர்கள் சாலையில் அமர்ந்து திடீர் போராட்டம் நடத்தினர்.