சேலம், எடப்பாடி:
சேலம் மாவட்டம் எடப்பாடியில், ரூ.5000 லஞ்சம் வாங்கியதாக தனி வட்டாட்சியர் கோவிந்தராஜன் மற்றும் அவரது வாகன ஓட்டுநர் வெங்கடாசலம் ஆகியோரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர்.
மூலப்பாதை பகுதியைச் சேர்ந்த தமிழரசன் என்ற நபரிடம் பட்டா நிலத்திற்கு NOC சான்றிதழ் வழங்க பணம் கோரப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அவர் லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் புகார் அளித்தார்.
அதன்பேரில், ரசாயனம் தடவிய ரூ.5000 பணத்தை தமிழரசன் வழங்கியபோது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இருவரையும் உடனடியாக பிடித்தனர். தற்போது, இருவரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.