கரூர்: காந்தி கிராமம் சந்தை அருகே உள்ள மைதானத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமினை முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார்.
ஆனால், முகாமில் பொதுமக்களின் பங்கேற்பு மிகவும் குறைவாக இருந்தது. இதனால், ஏற்கனவே மனுக்கள் அளித்தவர்களுக்கே அதிகாரிகள் உரிய ஆவணங்களை வழங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பங்கேற்பாளர்கள் குறைவாக இருந்ததால், முகாம் வெறிச்சோடி போல் காட்சியளித்தது.