தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட ஸ்டேட் பேங்க் காலனி 60 அடி சாலை நீண்டகாலமாக சேதமடைந்து, தினந்தோறும் பொதுமக்கள் விபத்துக்கு உள்ளாகும் அபாயநிலையிலுள்ளது. இதை உடனடியாக சரிசெய்ய வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும், மாநகராட்சி நிர்வாகம் இதுவரை எந்தச் செயல்திறன் கொண்ட நடவடிக்கையும் எடுக்காமல் வெளிப்படையான அலட்சியம் காட்டி வருவது கடும் கண்டனத்திற்குரியது.
இந்த பொறுப்பற்ற மற்றும் தாமதமான செயல்பாட்டை எதிர்த்து, சட்ட நன்பன் இயக்கம் சார்பில் பொதுமக்களுக்கு அல்லா வழங்கி, மாநகராட்சியின் செயல்பாடுகளை வன்மையாக கண்டித்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.
ரா . கண்ணன் – சிறப்பு நிருபர் தூத்துக்குடி.










