– மக்கள் தகவலின் அடிப்படையில் மாவட்ட ஆட்சியரிடம் புகார்: “தமிழர் குரல்” மாத இதழ் சார்பில் நடவடிக்கை கோரிக்கை
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு சார்பில் இயங்கும் 108 அவசர ஆம்புலன்ஸ் சேவையில் தொடர்ச்சியான தடை மற்றும் அலட்சியம் நடைபெற்று வருவதாக பொதுமக்களிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில், தமிழர் குரல் இதழ் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் அதிகாரப்பூர்வ புகார் அளிக்கப்பட்டுள்ளது.
காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் இயங்க வேண்டிய 108 ஆம்புலன்ஸ் கடந்த 29.01.2026 அன்று தைப்பூச விழா நாளில் பணியாளர்கள் இல்லாத காரணத்தால் முற்றிலும் இயங்காமல் இருந்தது. ஆயிரக்கணக்கான மக்கள் நடமாடும் விழா நாளில் கூட அவசர சேவை இல்லாமல் போனது பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதற்கு முன்பு உடன்குடி அரசு மருத்துவமனையில் இரவு நேரங்களில் 108 சேவை நிறுத்தப்பட்டிருந்தது. இது குறித்து தமிழர் குரல் இதழ் சார்பில் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் தலையிட்டு அங்கு சேவை மீண்டும் தொடங்கப்பட்டது. இதற்கு மாவட்ட ஆட்சியருக்கு இதழ் நிர்வாகம் நன்றியையும் தெரிவித்துள்ளது.
ஆனால் அதே மாவட்டத்தில் மீண்டும் இதே போன்ற தவறு நிகழ்ந்திருப்பது, இது தனிப்பட்ட சம்பவம் அல்ல – முழு அமைப்பின் தோல்வி என்பதை காட்டுகிறது.
108 ஆம்புலன்ஸ் சேவை என்பது 24×7 இயங்க வேண்டிய அத்தியாவசிய அவசர பொது சேவை.
உச்சநீதிமன்றம் தெளிவாக கூறியுள்ளது:
“அவசர மருத்துவ சேவை வழங்காதது அரசியல் சட்டம் பிரிவு 21 (உயிர் உரிமை) மீறல்.”
“டிரைவர்கள் மற்றும் EMT பணியாளர்கள் இல்லை ” என்ற காரணம் எந்த சூழலிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.
தமிழ்நாட்டில் 108 சேவை Public–Private Partnership (PPP) முறையில் தனியார் நிறுவனம் மூலம் இயக்கப்படுகிறது.தனியார் நிறுவனம் கடும் பொறுப்பு.
டிரைவர் EMT பணியாளர்கள் இல்லாமல் ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டிருப்பது:
ஒப்பந்த மீறல்,
பொது சேவை குறைபாடு,
மனித உயிருக்கு நேரடி அச்சுறுத்தல்,எனவே சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்தின் மீது உடனடி ஒழுங்கு நடவடிக்கை (disciplinary action) எடுக்கப்பட வேண்டும்.
ஆம்புலன்ஸ் ஊழியர்களின் நிலை – மனிதாபிமானமற்ற நிர்வாகம்( EMRI Green Health Services)
மேலும் அதிர்ச்சி தரும் உண்மை:
108 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் மற்றும் EMT பணியாளர்கள் தினமும் 12 மணி நேர ஷிப்ட் வேலை, அரசு வழங்க சொன்ன 16% வருடாந்திர ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை, தமிழ்நாடு முழுவது சரியான பராமரிப்பு இல்லாமல் பல வாகனம் இயக்க படுவதாக தகவல், நீதிமன்றம் வேலை இழந்த பணியாளர்களுக்கு வேலையை உறுதி செய்தது அனால் நீதிமன்ற உத்திரவை தனியார் நிர்வாகம் மதித்து நடைமுறை படுத்தவில்லை , அரசு நிர்ணயித்த சம்பளம் முழுமையாக வழங்கப்படவில்லை, மேலும் போதுமான பணியாளர்கள் இல்லாத காரணத்தால் வேலை பார்க்கும் பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய விடுப்பு வழங்க முடியவில்லை என்று பணியாளர்கள் குற்றசாட்டு . இதன் விளைவாக ஊழியர்கள் மன உளைச்சலில் பணியாற்ற வேண்டிய நிலை – இதுவே சேவை தடைகளுக்கும் முக்கிய காரணமாகிறது.
அவசர சேவையில் பணிபுரியும் ஊழியர்களை இப்படிப் புறக்கணிப்பது மனிதாபிமானமற்ற செயல்.
பொதுமக்கள் மற்றும் தமிழர் குரல் இதழின் கோரிக்கை
1)*24×7 டிரைவர் & EMT நிரந்தர ஏற்பாடு செய்தல் ,
2)தனியார் நிறுவனத்தின் மீது நடவடிக்கை,
3) மாற்று ஏற்பாடு (fail-safe system) உருவாக்கம்.
108 ஆம்புலன்ஸ் சேவை என்பது கருணை சேவை அல்ல –
மக்களின் சட்ட உரிமை.
ஒரு உயிர் போன பிறகு விசாரணை தேவையில்லை.உயிர் போகும் முன்பே நடவடிக்கை தேவை.
தமிழர் குரல் இதழ் பொதுமக்கள் குரலாக தொடர்ந்து இந்த விவகாரத்தை கண்காணிக்கும்.
நிர்வாக ஆசிரியர் –தோழர் VP சிங்











