தூத்துக்குடி
Tamil Nadu Pre Primary and Teachers Association (TNPTA) சார்பில், தமிழ்நாடு முழுவதும் பணியாற்றும் LKG–UKG ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.5000 ஊதிய உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து மாநில அளவிலான தொடர் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக TNPTA வெளியிட்டுள்ள அறிவிப்பில், 2022 முதல் பலமுறை அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்றும் இதுவரை எந்தத் தீர்வும் கிடைக்கவில்லை என குற்றம்சாட்டப்பட்டுள்ளது. குறிப்பாக, 2381 அங்கன்வாடிகளில் பணியாற்றும் LKG–UKG ஆசிரியர்கள் மிகக் குறைந்த ஊதியத்தில் கடுமையான பணிச்சுமையுடன் செயல்பட்டு வருவதாகவும், இது குழந்தைகளின் கல்வித் தரத்தையும் பாதிக்கக் கூடிய நிலை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய கோரிக்கைகள்:
- LKG–UKG ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.5000 ஊதிய உயர்வு
- பணிநேர வரம்பு (காலை 9.00 முதல் மாலை 4.10 வரை) முறையாக அமல்படுத்தல்
- உணவு இடைவேளை வழங்குதல்
- பணிப்பாதுகாப்பு மற்றும் நிரந்தர சேவை விதிமுறைகள்
- கூடுதல் நிர்வாகப் பணிகளை ரத்து செய்தல்
- பெற்றோர் புகார்கள் என்ற பெயரில் ஆசிரியர்களுக்கு அழுத்தம் கொடுப்பதை நிறுத்துதல்
இந்த கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்படாவிட்டால்,
🔹 மார்ச் 23 முதல் மாநிலம் முழுவதும் உண்ணாவிரத போராட்டம்
🔹 மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு தொடர் ஆர்ப்பாட்டம்
🔹 கல்வித்துறை அலுவலகங்கள் முற்றுகை
போன்ற கடும் போராட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என TNPTA எச்சரித்துள்ளது.
TNPTA மாவட்ட நிர்வாகிகள் வெளியிட்டுள்ள கூட்டுத் தீர்மானத்தில், “அரசு தொடர்ந்து அலட்சியம் காட்டினால், குழந்தைகளின் கல்வி எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, சட்டப்பூர்வமான அனைத்து போராட்ட வடிவங்களையும் பயன்படுத்துவோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தற்போது ஆசிரியர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது, அரசின் உடனடி தலையீடு அவசியம் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது.
செய்தியாளர் – ரா . கண்ணன்
PH – 9842350549











