24.01.2026
தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும்
முதன்மை வேலை வழங்கும் அமைப்பான
தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகத்திற்கு
எங்களின் கடும் கண்டனமும், நியாயமான கோரிக்கையும்.
தொழிற்சங்க விரோத, தொழிலாளர் விரோத செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வரும்
OURLAND (அவர் லேண்ட்) ஒப்பந்த நிறுவனம் உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டும்.
தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகமே,
தூய்மை பணியாளர்களை அடிமைகள் போல நடத்தும்
OURLAND நிறுவனத்தின் அநீதிக்கு
நீங்கள் துணை போகாதீர்கள் 😰😭
தொழிலாளர்களின் உரிமைக்காக குரல் கொடுத்த
AICCTU தொழிற்சங்க தலைவர்
தோழர் பொன்ராஜ் அவர்களின்
அநியாயமான வேலை நீக்க உத்தரவை உடனடியாக ரத்து செய்து
பணியில் மீண்டும் அமர்த்த வேண்டும்.
மாநகராட்சி நிர்வாகமே,
ஒரு தனியார் முதலாளியின் விருப்பமா முக்கியம்?
அல்லது தூத்துக்குடி மக்களுக்கும்
உழைக்கும் தொழிலாளர்களுக்கும் நியாயமா முக்கியம்? ❓
தொழிலாளர்கள் போராட்டத்திற்கு தள்ளப்படும் சூழ்நிலையை
உருவாக்க வேண்டாம்.
தூத்துக்குடி மாநகராட்சி தூய்மை பணியாளர்கள்
ஏற்கனவே பல்வேறு இன்னல்களுக்கு
தொடர்ந்து ஆளாகி வருகின்றனர்.
அவர்களை மீண்டும் போராட்டப் பாதைக்கு
தள்ளாதீர்கள்.
எனவே,
தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினரும்
சமூக நலன் துறை அமைச்சருமான
மதிப்பிற்குரிய திருமதி கீதா ஜீவன் அவர்களும்,
தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரும்
மதிப்பிற்குரிய திருமதி கனிமொழி கருணாநிதி அவர்களும்
இந்த பிரச்சினையில் தலையிட்டு
உடனடியாக சுமூக தீர்வு காண வேண்டும் என
உழைக்கும் தொழிலாளர்களின் சார்பில்
வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.
🚩 AICCTU 🚩
அகில இந்திய தொழிற்சங்க மைய கவுன்சில்
தூத்துக்குடி மாவட்டம், தோழர் சகாயம்.
📞 8056313370.
கோ.அஜ்மல்பாரூக் – நிருபர் தூத்துக்குடி.











