ராமநாதபுரம் முதல் ராமேஸ்வரம் வரை உள்ள தேசிய நெடுஞ்சாலை பல இடங்களில் குண்டும் குழியமாக காணப்படுவதால், தொடர் விபத்துகள் மற்றும் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருவதாக குற்றம்சாட்டி, பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் நூதனமான போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சாலை சீரமைப்பு தொடர்பாக கடந்த பல மாதங்களாக தேசிய நெடுஞ்சாலைத் துறை, மாவட்ட ஆட்சியர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தொடர்ந்து புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.
இதனை கண்டித்து, எதிர்வரும் பிப்ரவரி 01 ஆம் தேதி காலை 10 மணிக்கு ராமநாதபுரம் அரண்மனை வாசலில், பொதுமக்களிடம் பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத் துறைக்கு நிதி இல்லை எனில், பொதுமக்களிடம் சேகரிக்கப்படும் அந்த பணத்தை அன்றே மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ந. பிரபாகரன் – சிறப்பு நிருபர் இராமநாதபுரம்.











