தகவல் தராத முதன்மை கல்வி அலுவலருக்கு அபராதம்.
தமிழ் நாடு தகவல் ஆணையம் உத்தரவு.
கீழக்கரை.டிச.28
தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தகவல் தராத முதன்மை கல்வி அலுவலருக்கு ரூ7500 அபராதம்.
இதுகுறித்து
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நுகர்வோர் நலச்சங்கம் தலைவர் மு.செய்யது இப்ராஹீம். கூறியதாவது இராமநாதபுரம் மாவட்டம் முதன்மைச் கல்வி அலுவலர் இடம்
தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005 ன் படி 6 கீழ் 18.03.23ல்
7 கேள்விகளும். 01.04.23ல் 5 கேள்விகளும் கேட்டு மனு செய்ததில் பதில் கிடைக்காத காரணத்தினால் மேல்முறையீடு அலுவலரிடம் 08.05.2023. மனு செய்தேன். அதற்கும் பதில் கிடைக்காத காரணத்தினால் சென்னை மாநில தகவல் ஆணையத்திற்கு 15.06.2023.மேல் முறையீடு செய்ததின் அடிப்படையில் 08.10.2025. காணொளி காட்சி மூலம் விசாரணை நடைபெற்றதை தொடர்ந்து .ஒரு மாதத்திற்குள் அனைத்து கேள்விகளுக்கும் முழு தகவல் வழங்க வேண்டும் . மேலும் மனுதாரருக்கு இரண்டுக்கும் சேர்த்து இழப்பீடாக ரூபாய் 5000 மற்றும் 2500 மொத்தம் ரூபாய் 7500 வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டதை தொடர்ந்து எனக்கு அனைத்து தொகையும் காசோலை மூலம் வந்துள்ளது. அபராத தொகை கிடைக்கப்பெற்றாலும் நான் கேட்ட கேள்விகளுக்கு முழுமையான தகவல் தரவேண்டும் என்று உத்தரவிட்டும் இதுவரை பதில் அளிக்காத அதிகாரிகள் மீது தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005ன் கீழ் துறை ரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு கூறினார்.
படம் விளக்கம் – கீழக்கரை நுகர்வோர் நலச்சங்க தலைவர் செய்யது இபுராகிம்.











