திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா நாளையுடன் நிறைவடைய உள்ள நிலையில், 10ஆம் நாளான இன்று (12.12.2025) அதிகாலை, அக்னி ஸ்தலமாக கருதப்படும் திருவண்ணாமலை மலையிலுள்ள 2,668 அடி உயர உச்சியில் தீபம் ஏற்றப்பட்டது.
மரபுப்படி நடைபெறும் இந்த தீபம், சூரியோதய நேரத்தில் ஜோதி வடிவில் காணப்படும் என பக்தர்கள் நம்புகின்றனர்.
கார்த்திகை மாதத்தைக் குறிக்கும் முக்கிய நிகழ்வாக இந்த ஜோதி தரிசனம் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.
தலைமை நிருபர்: பழனிவேல்-9677602585











