கோவில்பட்டி தாசில்தாரை தொடர்பாக பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கருத்து தெரிவிக்கும் வகையில் 10-12-2025 அன்று கோவில்பட்டியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தோழர் அன்புராஜ் தலைமை வகித்தார்.
தமிழ் விவசாயிகள் சங்கத் தலைவர் ஓ. ஏ. நாராயணசாமி, மாவட்ட தலைவர் டி. எஸ். நடராஜன், கோவில்பட்டி வட்டார தலைவர் ஆர்.வி. வெங்கடாசலபதி, மற்றும் பல அமைப்புகளில் உள்ள ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.
பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் முன்வைத்த புகார்கள் குறித்து தக்க துறைகள் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
இவ்விழிப்புணர்வு ஆர்ப்பாட்டத்தை தமிழ் விவசாயிகள் சங்கம் – தூத்துக்குடி மாவட்டம் ஒருங்கிணைத்தது.











