சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்த சையது முகமது என்பவர், அபிராமபுரத்தில் உள்ள ஒரு ஏடிஎம் மையத்தின் அருகே 9 லட்சம் ரூபாய் பணம் கொண்ட பையுடன் நின்றிருந்தார். அந்த தொகை ஹவாலா பரிவர்த்தனைக்கு தொடர்புடையது என தெரிவிக்கப்படுகிறது.
அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர், அரிவாளை காட்டி அச்சுறுத்தி, சையது முகமதுவிடம் இருந்த பணப் பையை பறித்து கொண்டு தப்பிச் சென்றனர்.











