குஜராத்தி மொழியில் வெளியாகியுள்ள “லாலோ கிருஷ்ணா சதா சகாயதே” திரைப்படம் தற்போது பாக்ஸ் ஆபிஸில் அதிரடி வெற்றி பெற்று பேசுபொருளாக மாறியுள்ளது. மிக குறைந்த முதலீட்டிலேயே 14,000% வருமானம் ஈட்டியிருப்பது படக்குழுவையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதைப் பற்றி விரிவாக பார்க்கலாம்.
இந்திய பாக்ஸ் ஆபிஸ் வெற்றி பட்டியல் என்றாலே, பெரும்பாலும் பாலிவுட், கோலிவுட், டோலிவுட் ஆகிய மூன்று பெரிய திரையுலகங்களே நினைவுக்கு வரும். ரஜினி, கமல், விஜய், அஜித், ஷாருக்கான், சல்மான் கான், பிரபாஸ், அல்லு அர்ஜுன், மகேஷ் பாபு போன்ற பெரிய நட்சத்திரங்களின் ஆதிக்கம் காரணமாகவே இத்துறைகள் எப்போதும் முன்னிலையில்தான் இருக்கும்.
ரசிகர்கள் இவர்களின் படங்களுக்கு எந்த விலை டிக்கெட்டாக இருந்தாலும் செலவழிக்க தயாராக இருப்பதும் இந்த துறைகளின் வெற்றிக்குக் காரணம். இந்நிலையில், KGF படத்தின் மூலமாக கவனத்தை ஈர்த்த கன்னட சினிமா (Sandalwood) PAN INDIA வரிசையில் சேர்ந்து விட்டது.
“KGF” படம் தரமான படமாக இருந்தால் மொழி முக்கியமல்ல; நாடு முழுவதும் ஹிட் பெற முடியும் என்பதற்கான சிறந்த உதாரணமாக மாறியது. இதே பாதையில் தற்போது குஜராத்தி சினிமாவும் பயணிக்கிறது.
**அதில் முக்கியமான படமாக.
“லாலோ கிருஷ்ணா சதா சகாயதே”** தற்போது பாக்ஸ் ஆபிஸில் தன்னுடைய சாதனையை எழுதிக் கொண்டிருக்கிறது. எதிர்பார்ப்பில்லாமல் வெளியான இந்தப் படம் ஆரம்ப வாரங்களில் அதிக வரவேற்பைப் பெறவில்லை.
மொத்தமாக 50 லட்சம் ரூபாய் மட்டுமே பட்ஜெட். இயக்குனர் Ankit Sakhiya தவிர பெரிய பெயர் எவரும் இல்லாததால் ஆரம்பத்தில் திரையரங்குகளிலும் கூட்டம் குறைவாகவே இருந்தது.
- முதல் வார வசூல் – 26 லட்சம்
- இரண்டாவது வாரம் – 29 லட்சம்
- மூன்றாவது வாரம் – 43 லட்சம்
ஆனால் நான்காவது வாரம் தொடங்கியதும் படம் முற்றிலும் வேறு நிலைக்கு சென்றது. அனைத்து தரப்பினரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் படம் 10 கோடி வசூலைத் தொட்டது.
அதை தொடர்ந்து—
- 5-வது வாரத்தில் – 25 கோடி
- 6-வது வாரத்தில் – மேலும் 25 கோடி
என்ற அளவில் வசூல் அதிகரித்து, குஜராத்தி திரைப்படத்திற்கு PAN INDIA அளவில் பெரிய கவனம் கிடைக்கத் தொடங்கியது.
குஜராத்தி சினிமாவில் இதற்கு முன்பு சாதனை படைத்த “சால் ஜீவி லய்யே” படத்தின் 50 கோடி வசூலை இதே படம் மிகவும் எளிதாக கடந்துவிட்டது.
இப்போது மிக விரைவில் 100 கோடி கிளப்பை அடையும் என எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இதனால் ரசிகர்களும், குஜராத்தி திரையுலகமும் கொண்டாட்ட சூழலில் உள்ளனர்.











